'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு பிரபல நடிகருடன் செம ஆட்டம் ஆடிய சமந்தா: வைரல் வீடியோ

'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு பிரபல நடிகருடன் செம ஆட்டம் ஆடிய சமந்தா: வைரல் வீடியோ

பிரபல நடிகை சமந்தா ’ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு பிரபல நடிகருடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது இணைந்து நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியுள்ளார். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படத்தின் வெற்றிக்கு இந்த பாடலும் ஒரு காரணம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண்ஜோஹர் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தா, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அக்சயகுமாருடன் இணைந்து ’ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடனமாடினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா, தனது விவாகரத்திற்கான காரணம் உள்பட பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES