பிக்பாஸ் சீசன் 6 எப்போது? கமல்ஹாசனா? சிம்புவா?

பிக்பாஸ் சீசன் 6 எப்போது? கமல்ஹாசனா? சிம்புவா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் இந்த ஐந்து சீசன்களில் ஆரவ், ரித்விகா, முகின், ஆரி மற்றும் ராஜு ஜெயமோகன் ஆகியோர் டைட்டில் பட்டங்களை வென்றுள்ளனர். இதனை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இதன் டைட்டில் பட்டத்தை பாலாஜி முருகதாஸ் வென்றார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் 6வது சீசன் மிக விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிக் பாஸ் 5 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் பாதி தொகுத்து வழங்கினார் அதன் பிறகு நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் 6வது சீசனை தொகுத்து வழங்குவது கமல்ஹாசனா? அல்லது சிம்புவா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பை கமலஹாசன் முடித்துவிட்ட நிலையில் அடுத்தடுத்து படங்களில் கமல் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே 6வது சீசனை சிம்பு தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் போல் சாஃப்ட்டாக இல்லாமல் போட்டியாளர்களை பாரபட்சமின்றி வச்சி செய்ய வேண்டிய நேரத்தில் சிம்பு கடுமையாக நடந்து கொண்டார் என்றும் அது பார்வையாளருக்கு திருப்தியை அளித்ததாகவும் கூறப்பட்டது. எனவே பிக்பாஸ் 6வது சீசனை சிம்பு தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

LATEST News

HOT GALLERIES