மறைந்த நடிகை சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா?- கண் கலங்கும் ரசிகர்கள்
சின்னத்திரை நடிகைகள் அனைவருமே மக்களிடம் ஒரு பெரிய வரவேற்பை பெறுகிறார்கள்.
அப்படி எல்லோரின் வீட்டிலும் அவர்களின் குடும்ப பெண்ணாக பார்க்கப்பட்டவர் சீரியல் நடிகை சித்ரா.
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் மக்களின் மனதை கவர்ந்தவர். தொடர்ந்து அவர் சீரியல்களை தாண்டி படங்கள் நடித்து கலக்குவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் என்ன பிரச்சனையோ தெரியவில்லை கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனியார் ஹோட்டலில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது அவரது குடும்பத்தை தாண்டி சித்ரா ரசிகர்களுக்கு பெறும் அதிர்ச்சியாக இருந்தது.
அண்மையில் விஜய் தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா நடந்தது. அதில் மறைந்த நடிகை சித்ராவிற்கு மக்களின் நாயகி என்கிற விருது கொடுக்கப்பட்டுள்ளது.
இதை வாங்க நடிகை சித்ரா இல்லையே என அவரது ரசிகர்கள் கண் கலங்குகிறார்கள்.