பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் முல்லையின் பியூட்டி சீக்ரெட் என்ன தெரியுமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் கூட்டுக் குடும்பத்தை அழகாக காட்டிய ஒரு சீரியல்.
4 வருடங்களுக்கு மேலாக பிரியாமல் இருந்த அண்ணன்-தம்பிகள் இப்போது பிரிந்துவிட்டார்கள், விரைவில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்பது போல் கதை நகர்ந்து வருகிறது.
ஜீவா மனமும் மீண்டும் அண்ணனுடன் இணைய வேண்டும் என்று தான் தோன்றுகிறது, அவர் எப்போது வருவார் என தெரியவில்லை. கண்ணனும் அதே மனநிலையில் தான் உள்ளார்.
இந்த தொடரில் முல்லையாக நடித்து வருபவர் லாவண்யா. இவர் தற்போது சில பியூட்டி டிப்ஸ் கூறியுள்ளார். நெல்லிக்காய் ரொம்ப நல்லது, நீங்க எவ்வளோ நெல்லிக்காய் எடுத்துக்கிறீங்களோ, அந்தளவுக்கு உங்க உடம்பில் இருக்கும் நச்சுத்தன்மை நீங்கும். அதனால நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பேன்.
கறிவேப்பிலை முடியை கருப்பாக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும், அதையும் தாண்டி சருமத்தில் உள்ள பிளாக் மார்க்ஸ் எல்லாவற்றையும் எடுக்கும், அதனால் அவ்வப்போது கறிவேப்பிலை ஜுஸ் குடிப்பேன்.
நம்ம உடலின் வெப்பநிலையை கற்றாழை நல்லா பராமரிக்கும். இதை கொஞ்சம் கொஞ்சமா உங்க டயட்ல சேர்த்துக்கலாம். நான் குளிக்கிறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கற்றாழை ஜெல் எடுத்து, என் முடியில அப்ளை பண்ணுவேன்.
கற்றாழை ஜெல், சீரகம், மிளகு சேர்த்து நல்லா அரைச்சு அதை வடிகட்டி, தயிர் சேர்த்து குடிக்கலாம் என கூறியிருக்கிறார்.