காதலனை நம்பி மோசம் போன பிரபல நடிகை.. ஆறுதல் சொல்லி அரவணைத்த தயாரிப்பாளர்

காதலனை நம்பி மோசம் போன பிரபல நடிகை.. ஆறுதல் சொல்லி அரவணைத்த தயாரிப்பாளர்

பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்துடன் இருந்த குத்து விளக்கு நடிகை இப்போது ஆளே மாறிவிட்டார். ஒரு காலத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த நடிகையா இது என கேட்கும் அளவுக்கு கிளாமர் ரூட்டுக்கு மாறியுள்ளார்

இதற்கு முக்கிய காரணம் காதலனை நம்பி அவர் ஏமாந்தது தான். ஒரு சில படத்தில் அந்த இளம் நடிகருடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்ததில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி பக்காவாக பற்றிக் கொண்டது.

அதையடுத்து இருவரும் ரகசிய குடித்தனம் நடத்தும் அளவுக்கு நெருக்கமாக இருந்தார்கள். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இந்த ஜோடி இப்போது எலியும் பூனையுமாக மாறிவிட்டது.

காதல் மயக்கத்தில் இருந்த நடிகை சினிமாவில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்தார். அதனாலேயே பிரேக் அப்புக்கு பிறகு அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் வேறு வழியில்லாமல் அவர் ஏடாகூடமான கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் அந்த பெரிய தயாரிப்பாளரின் நட்பு கிடைத்தது. அவர் தயவில் வாய்ப்பும் கிடைத்தது.

ஆனால் இப்போது தயாரிப்பாளர் நடிகையை கண்டு கொள்வதில்லையாம். இதனால் மனமுடைந்து போன நடிகை அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் இருக்கிறாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES