பிகினி உடையில் பிறந்த நாள் கொண்டாட்டம்: கேலி செய்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமீர்கான் மகள்!
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மகள் ஐராகான் சமீபத்தில் பிகினி உடையில் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தன்னை கடுமையான விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேலும் சில பிகினி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐராகான் வெளியிட்டுள்ளார் .
என்னுடைய பிறந்தநாள் புகைப்படங்களை பார்த்து என்னை கேலி செய்த மற்றும் விமர்சனம் செய்தவர்களுக்காக இந்த புகைப்படங்கள் என்று அவர் அதில் பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்த புதிய புகைப்படங்களிலும் அவர் பிகினி அணிந்துள்ளார்.
அமீர்கான் மகளின் பிறந்தநாள் புகைப்படங்களை கேலி செய்த நெட்டிசன்கள் இந்த புகைப்படங்களை பார்த்து இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர் என்பது இந்த புகைப்படங்களுக்கு பதிவு செய்யப்பட்டு வரும் கமெண்ட்ஸ்களிலிருந்து தெரிய வருகிறது.