பிக்பாஸ் பாவனியுடன் ஜோடியாகும் அமீர்: வைரல் வீடியோ

பிக்பாஸ் பாவனியுடன் ஜோடியாகும் அமீர்: வைரல் வீடியோ

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போதே அமீர் மற்றும் பாவனி காதலித்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அமீர்-பாவனி ஜோடி சேர்ந்துள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்பதும் முதல் சீஸனில் அனிதா-ஷாருக் ஜோடி டைட்டில் பட்டம் வென்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிபி ஜோடிகள் சீசன் 2 வரும் மே 8ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்த புரமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. யார் யார் ஜோடி சேர்ந்து போட்டியாளர்களாக வரபோகின்றார்கள் என்ற காட்சிகள் உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக வேல்முருகன் - இசைவாணி, ஐக்கி பெர்ரி - தேவ், அபிஷேக் - ஸ்ருதி, பாவனி - அமீர், சுஜா - அவரது கணவர் சிவகுமார், ஆர்த்தி அவரது கணவர் கணேஷ், தாமரை அவரது கணவர் பார்த்தசாரதி மற்றும் டேனி ஆகியோர் போட்டியிடவுள்ளனர் என தெரிகிறது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலேயே பாவனி மற்றும் அமீர் ஆகிய இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்ததால் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்ல அவர்களுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜூ மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்த பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதே நேரத்தில் பிபி ஜோடி முதல் சீசனில் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் இருந்த நிலையில் இந்த சீசனிலும் அவர்களே தொடர்வார்களா? அல்லது மாற்றப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LATEST News

Trending News

HOT GALLERIES