பிரபுதேவாவின் அடுத்த படத்தின் அட்டகாசமான அறிவிப்பு!
நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் பிரபுதேவா தற்போது மூன்று படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபுதேவா நடிப்பில் உருவாகும் அடுத்த படத்திற்கு ’ரேக்ளா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த படத்தை அன்பு என்பவர் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தை அம்பேத்குமார் என்பவர் தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற ரேக்ளா ரேஸ் குறித்த கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் ரேக்ளா ரேஸ் கதையம்சம் குறித்த படம் கடந்த 1987ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘உழவன் மகன்’ படத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.