லியோவில் அர்ஜுனின் ரோல் இப்படி தான் இருக்கப்போகிறதா? எகிறும் எதிர்பார்ப்பு!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மும்முரமாக லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடிப்பது நமக்கு தெரிந்த ஒன்றே.
லியோ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் அர்ஜுன் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்நிலையில் லியோ படத்தில் அர்ஜுன் நடிக்கவிருக்கும் கதாபாத்திரம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதில், ஆரம்பத்தில் அர்ஜுன் விஜய்க்கு நண்பராக இருக்கிறாராம். கடைசியில் சில விஷயத்தால் விஜய்க்கு துரோகம் செய்துவிட்டு வில்லனாக மாறுவது போன்ற ரோலில் தான் அர்ஜுன் நடிக்கப்போவதாக வலைப்பேச்சு நிகழ்ச்சியில் கூறியுள்ளனர். ஆனால் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக கூறவில்லை.