கட்டியணைத்த புகைப்படம்.. மனம் வருந்திய பிரபல நடிகை
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படத்திற்கு மனம் வருந்தியிருக்கிறார்.
1998-இல் வெளியான ”உயிரே” என்ற தமிழ் படத்தில் இடம்பெற்ற ”தக்க தைய்ய தைய்யா” பாடலின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் மலைக்கா அரோரா. பாலிவுட்டின் தயாரிப்பாளரும் நடிகையுமான மலைக்கா அரோரா நடிகர் அர்ஜுன் கபூர் இருவருக்கும் ரொமாண்டிக் என்று பல வருடங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருவரும் அதை உண்மை என்பது போல அடிக்கடி சமூக வலைத்தளத்தில் சேர்ந்து எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தனர்.
மலைக்கா அரோரா
இந்நிலையில் காதலர் தினத்தன்று வெளியிட்ட ஒரு புகைப்படத்திற்காக மனம் வருந்தியிருக்கிறார் மலைக்கா. அர்ஜுன் மலைக்காவை அணைத்தபபடியிருந்த அந்தப்போட்டோவை மலைக்காவுக்கு அனுப்ப, அவரோ அதை உடனடியாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விட்டார். இதைப்பார்த்த அர்ஜுன், நான் உங்களுக்குத்தான் அனுப்பினேன் நீங்கள் இணையத்தில் போட்டு விட்டீர்களே என்று சொல்ல, இதற்காக மனம் வருந்தி அர்ஜுனிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார் மலைக்கா.