41 வயதாகும் நடிகையை 2வது திருமணம் செய்யும் பாலிவுட் நடிகர்

41 வயதாகும் நடிகையை 2வது திருமணம் செய்யும் பாலிவுட் நடிகர்

பிரபல பாலிவுட் நடிகர் பர்கான் அக்தர், 41 வயதாகும் நடிகையும் பாடகியுமான ஷிபானியை திருமணம் செய்ய இருக்கிறார்.

 

பிரபல இந்தி நடிகர் பர்கான் அக்தர். இவர் 2008-ல் வெளியான ராக் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவரது பாக மில்கா சிங் படம் பெரிய வெற்றி பெற்றது. பர்கான் அக்தர் நடிப்பில் கடந்த வருடம் டூபான் படம் வெளியானது. சில படங்களை இயக்கியும் இருக்கிறார். 

 

அமீர்கான் நடித்த தில் சத்தா ஹை படத்தை பர்கான் அக்தர் இயக்கி இருந்தார். இந்த படம் தேசிய விருது பெற்றது. 2000-ம் ஆண்டு அதுனா பாபானி என்பவரை பர்கான் அக்தர் திருமணம் செய்து 17 ஆண்டுகளுக்கு பிறகு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் இந்தி நடிகையும், பாடகியுமான ஷிபானி தந்தேக்கருடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. 

 

பர்கான் அக்தர், ஷிபானி தந்தேக்கர்

பர்கான் அக்தர், ஷிபானி தந்தேக்கர்

 

இந்த நிலையில் 41 வயதாகும் ஷிபானியை 48 வயதாகும் பர்கான் அக்தர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இவர்கள் திருமணம் வருகிற 21-ந்தேதி எளிமையான முறையில் நடக்க உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES