அல்லு அர்ஜுனை பாராட்டிய பிரபல பாலிவுட் நடிகர்

அல்லு அர்ஜுனை பாராட்டிய பிரபல பாலிவுட் நடிகர்

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற புஷ்பா திரைப்படத்தில் நடித்த நடிகர் அல்லு அர்ஜுனை பாராட்டி பிரபல பாலிவுட் நடிகர் பதிவிட்டிருக்கிறார்.

அல்லு அர்ஜுன் நடித்து இயக்குனர் சுகுமார் இயக்க்கி கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது. பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் போன்ற பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்திருண்ட்தனர். கொரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து ‘புஷ்பா’ திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. 

 

புஷ்பா

புஷ்பா

 

 

இந்நிலையில், புஷ்பா திரைப்படத்தை பார்த்த பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அனுபம் கேட் அவருடைய பாராட்டுக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, ‘புஷ்பா’ பார்த்தேன். உண்மையான ப்ளாக்பஸ்டர் திரைப்படம். மிகச் சிறப்பான, உற்சாகம் மிகுந்த படம். அன்புள்ள அல்லு அர்ஜுன், நீங்கள் ஒரு ராக் ஸ்டார். உங்களுடைய ஒவ்வொரு நுணுக்கமான நடிப்பையையும் ரசித்தேன். விரைவில் உங்களுடன் நடிக்க ஆவலாக இருக்கிறேன். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் ஒரு பெரிய வாழ்த்து. ஜெய் ஹோ! என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

 

அனுபம் கேர்

அனுபம் கேர்

 

இவர் எம்.எஸ்.தோனி, தி அக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் போன்ற பல படங்களிலும் தமிழில் விஐபி, லிட்டில் ஜான் போன்ற படங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES