கோடிகளில் புரண்ட புனித் ராஜ்குமாருக்கு குடிசையில் நினைவு இல்லம்!
கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கோடிகளில் புரண்ட புனித் ராஜ்குமார் சமீபத்தில் காலமான நிலையில் அவரது நினைவு இல்லம் ஒரு குடிசையில் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகினர் இடையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகராக மட்டுமின்றி புனித் ராஜ்குமார் ஒரு சிறந்த சமூக சேவகர் என்பதும் அவரது பண உதவியால் 1800 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகிறார்கள் என்பதும், அது மட்டுமன்றி இலவச பள்ளிகள், கோசாலைகள், முதியோர் இல்லம் ஆகியவைகளையும் அவர் தனது சொந்த பணத்தில் நடத்தி வந்தார் என்பது அவரது மறைவிற்குப் பின்னரே பலருக்கு தெரிய வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் புனித் ராஜ்குமாரின் பூர்வீக வீடு கர்நாடக மாநிலத்தில் உள்ள காஜனனூர் என்ற கிராமத்தில் உள்ளது. இந்த வீட்டை கடந்த சில மாதங்களுக்கு முன் பார்வையிட்ட புனித் ராஜ்குமார் தனது தந்தையின் நினைவு இல்லமாக அதை மாற்ற முடிவு செய்தனர். ஆனால் அதற்குள் அவர் காலமாகி விட தற்போது ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார் ஆகிய இருவரின் நினைவு இல்லமாக இந்த குடிசை வீடு மாற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார் நினைவு இல்லமாக இந்த இல்லம் பழமை மாறாமல் மாறும் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் ராஜ்குமாரின் மருமகன் தெரிவித்துள்ளார். இந்த வீடு குறித்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.