விநாயகர் ஓவியத்தின் முன் 'மணி ஹெய்ஸ்ட்' பிரபலம்: வைரல் புகைப்படம்!

விநாயகர் ஓவியத்தின் முன் 'மணி ஹெய்ஸ்ட்' பிரபலம்: வைரல் புகைப்படம்!

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான ‘மணி ஹெய்ஸ்ட்’ என்ற தொடர் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது என்பதும் உலகம் முழுவதும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக புரபொசர் கேரக்டர் முதல் டோக்கியோ, பெர்லின், ஸ்டாக்ஹோம், நைரோபி உள்பட அனைத்து கேரக்டர்களும் ரசிகர்களை கவர்ந்தது என்பதும் இந்த தொடர் சமீபத்தில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த தொடரில் முக்கிய கேரக்டரில் அதாவது ஸ்டாக்ஹோம் என்ற கேரக்டரில் நடித்த நடிகை எஸ்தர் அசிபோ புகைப்படம் ஒன்று மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தின் பின்னணியில் விநாயகர் ஓவியம் இருக்க, அதற்கு முன் எஸ்தர் அசிபோ நின்று இருக்கும் இந்த புகைப்படத்தை அனைவரும் குறிப்பாக இந்தியர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

உலகப்புகழ் பெற்ற ஒரு நடிகை இந்திய கலாச்சாரத்தை பின்பற்றுவது பாராட்டுக்குரியது என பல கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு இந்தியாவில் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர் முடிவடைந்த நிலையில் வரும் 2023 ஆம் ஆண்டு இந்த தொடரின் கேரக்டர்களில் ஒன்றான பெர்லின் வாழ்க்கை வரலாறு கதை குறித்த தொடர் ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News