கோல்டன் அழகி… கிளாமர் உடையில் வைரலாகும் ஜான்வி கபூர் புகைப்படங்கள்!

கோல்டன் அழகி… கிளாமர் உடையில் வைரலாகும் ஜான்வி கபூர் புகைப்படங்கள்!

ஒட்டுமொத்த இந்தியாவிலும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற நடிகையாக வலம்வந்தவர்தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார். “தடக்“ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது வளர்ந்துவரும் நடிகைகளுள் ஒருவராகவும் ரசிக்களிடையே வரவேற்பு பெற்றவராகவும் இருந்துவருகிறார்.

நடிப்பை தவிர சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நடிகை ஜான்வி கபூர் தொடர்ந்து வொர்க் அவுட் மற்றும் போட்டோஷுட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கோல்டன் நிறத்தில் படு கிளாமராக உடையணிந்திருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்குகள் குவிந்து இருக்கின்றன.

இதையடுத்து பிசியான நடிகையாக வலம்வரும் ஜான்வி கபூர் சமீபத்தில் “ரூஹி“ திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார். கூடவே ஆனந்த் எல் ராயின் இயக்கத்தில் “குட் லக் ஜெர்சி“, “தோஸ்தானா 2“ போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். மேலும் பிரபல இயக்குநர் கரண் ஜோஹரின் இயக்கத்தில் வரலாற்றுத் திரைப்படமான “தக்த்“ திரைப்படத்திலும் அவர் இணைந்திருக்கிறார்.

“தக்த்“ திரைப்படத்தில் கரீனா கபூர், அனில் கபூர், ரன்வீர் சிங், விக்கி கௌஷால் போன்ற முன்னணி பிரபலங்களுடன் நடிகை ஜான்வி கபூர் இணைந்து நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் வெளியிட்டு உள்ள கோல்டன் நிற கிளாமர் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்டுகளையும் லைக்ஸ்குகளையும் குவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News