'புஷ்பா' படத்தின் சமந்தா பாடலுக்கு திடீர் எதிர்ப்பு: நீதிமன்றத்தில் வழக்கு!

'புஷ்பா' படத்தின் சமந்தா பாடலுக்கு திடீர் எதிர்ப்பு: நீதிமன்றத்தில் வழக்கு!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ என்ற படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் என்பதும், அந்த பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாடலில் ஆண்களை காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து எழுதப்பட்டதாகவும், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்றும் ஆந்திர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புஷ்பா திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால் படக்குழுவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LATEST News

Trending News