நடிகர் ஷாருக்கானின் மகன் பிணையில் விடுதலை
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடிகர் ஷாருக்கானின் மகன், ஆர்யன் கான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான ஆர்யன் கான் கடந்த 3ஆம் திகதி சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இவரது வழக்கு இன்று (28) மும்பை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, ஆர்யன் கான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.