ஷாருக்கான் படத்தில் நடிக்க மறுத்தாரா சமந்தா? என்ன காரணம்?

ஷாருக்கான் படத்தில் நடிக்க மறுத்தாரா சமந்தா? என்ன காரணம்?

ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ’லயன்’ படத்தில் நயன்தாரா நடித்து வரும் கேரக்டரில் முதலில் சமந்தா தான் தேர்வு செய்யப்பட்டு இருந்ததாகவும் ஆனால் சமந்தா அந்த படத்தில் நடிக்க மறுத்ததாகவும் தகவல்கள் வெளி வந்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அட்லி இயக்கிய ’தெறி’ மற்றும் ’மெர்சல்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்த சமந்தா, அடுத்ததாக ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கி வரும் ’லயன்’ படத்திலும் நாயகியாக நடிக்க அழைப்பு வந்ததாகவும், ஆனால் சமந்தா அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு காரணம் சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாகவும் அதனால் தான் ஷாருக்கான் படத்தில் நடிக்க மறுத்ததாகவும் அதனை அடுத்தே நயன்தாரா அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எதிர்பாராதவிதமாக சமந்தா திடீரென தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய முடிவு எடுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமந்தா தமிழ் தெலுங்கில் உருவாகி வரும் 2 புதிய படங்களில் நடிக்க தற்போது ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் அந்த படங்களின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை.

LATEST News

Trending News