2வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை!
தமிழில் விரட்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்.
தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர் தற்போது பாலகிருஷ்ணா ஜோடியாக அக்கண்டா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார். பின் 2 தடுப்பூசிகள் எல்லாம் போட்டுக் கொண்டார்.
இந்த நேரத்தில் மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாம். நோய் தொற்று ஏற்பட்டதை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.