உல்லாச கப்பலில் குத்தாட்டம்! பிரபல நடிகரின் மகன் சிக்கியது எப்படி? விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்
பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கானின் மகனான ஆர்யன் கானுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சமீபத்தில் மும்பையில் இருந்து கோவாவுக்கு 3 நாள் சுற்றுலாவாக கார்டிலியா என்ற சொகுசு கப்பலில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இதில் நடந்த கேளிக்கை விருந்து நிகழ்வில், போதைப் பொருட்களுடன் 8 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
இவர்களில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர். இவர்கள் அனைவரிடமும் இன்று பொலிசார் விசாரணை நடத்தினர், அடுத்தகட்டமாக செல்போன் உரையாடல்கள் மற்றும் புகைப்படங்களை பொலிசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில் ஆர்யன் கானின் செல்போனை ஆய்வு செய்ததில், சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
விரைவில் ஆர்யன் கானுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய முழு விவரங்களும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஆர்யன் கானின் வக்கீல் சதீஷ், போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுவது போன்று ஆர்யன் கான் எந்த தவறும் செய்யவில்லை.
இதற்கு முன்பு அவர் மீது எந்த வழக்கும் இல்லை என்றும், அவர் அனைத்து விசாரணைகளுக்கும் தயாராக இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்பெயினில் நடைபெற்ற படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு ஷாருக்கான் இந்தியா திரும்பியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.