மீண்டும் விஜய் தொலைக்காட்சி சீரியலில் நடிக்கவரும் நடிகை ஷீலா- சீரியல் ரசிகர்கள் ஹேப்பி
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை ஷீலாவின் கதாபாத்திரத்தை முடித்துவிட்டார்கள்.
இதனால் ரசிகர்கள் அனைவரும் வருத்தப்பட்டார்கள், நடிகை ஷீலாவும் தனக்கு மிகவும் ஹிட் கொடுத்த சீரியலில் இருந்து விலகுகிறோமே என மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.
தற்போது அவரை பற்றி ஒரு புதிய தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்த சரண்யா முக்கிய வேடத்தில் நடிக்க புதிய சீரியல் வரப்போகிறது.
அந்த சீரியலில் தான் ஷீலா, சரண்யாவின் அம்மாவாக நடிக்கப்போகிறார் என தகவல்கள் வருகின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.