‘டான்’ படத்தின் வேற லெவல் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் உருவாகி உள்ள லிப்ட் படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா நடித்துள்ளார்.
‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான கவின், கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற கவின், தற்போது வினீத் வரப்பிரசாத் இயக்கியுள்ள ‘லிப்ட்’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா நடித்துள்ளார்.
ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். அந்த சமயத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியதால், இப்படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாமல் போனது. இதையடுத்து லிப்ட் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்த படக்குழு, இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
லிப்ட் படத்தின் போஸ்டர்
இந்நிலையில், லிப்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. மேலும் லிப்ட் படத்தின் டிரெய்லர் நாளை வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.