ரன்பீர் கபூருடன் இணைந்த மாளவிகா மோகனன்

ரன்பீர் கபூருடன் இணைந்த மாளவிகா மோகனன்

2013-ல் மலையாளத்தில் வெளியான பட்டம் போலே என்கிற படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமானாலும், அதன்பிறகு ஐந்து வருடங்கள் எந்த படமும் இல்லாமல் யாருடைய கவனமும் பெறாமல் இருந்தவர் தான் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் ரஜினியுடனும், மாஸ்டர் படத்தில் விஜய்யுடனும் இணைந்து நடித்ததால் முன்னணி கதாநாயகிகள் வரிசைக்கு உயர்ந்து விட்டார். இதைத்தொடர்ந்து டோலிவுட்டிலும், பாலிவுட்டிலும் இவருக்கு நிறைய அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்த சந்தோசத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார் மாளவிகா மோகனன்.

இவர்கள் இணைந்து நடித்தது திரைப்படத்திற்காக அல்ல, ஒரு கமர்சியல் வெப்சைட் ஒன்றின் விளம்பரப் படத்தில் தான் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர். ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்தது குறித்து மாளவிகா மோகனன் கூறும்போது, கடைசியில் என்னுடைய தி பேவரைட் நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES