சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியின் வின்னரை தேர்ந்தெடுத்து விட்டார்களா.. அதிர்ச்சியை கிளப்பிய பதிவு

சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியின் வின்னரை தேர்ந்தெடுத்து விட்டார்களா.. அதிர்ச்சியை கிளப்பிய பதிவு

கடந்த சில வாரத்திற்கு முன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து ஸ்ரீதர் சேனா எனும் போட்டியாளர், எலிமினேட் ஆகி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இவரது எலிமினேஷனுக்கு பிறகு சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தன. நன்றாக பாடி வந்த ஸ்ரீதர் சேனாவை ஏன் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றினீர்கள் என்றும் ரசிகர்கள் கேட்க துவங்கினார்கள்.

மேலும், சூப்பர் சிங்கர் பென்னி தயாளின் தவறான தீர்ப்பு தான், ஸ்ரீதர் சேனாவின் எலிமினேஷனுக்கு காரணம் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இதனால் கோபமடைந்த நடுவர் பென்னி தயாள், சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறேன் என்றும், இனி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் ஓணம் பண்டிகையை குறித்து ஒரு பதிவு ஒன்றை பென்னி தயாள் வெளியிட்டிருந்தார். இதில் அவரை கடுமையாக விமர்சித்து ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

அந்த ரசிகரின் பதிவில், " ஏற்கனவே எலிமினேஷன் யார் என்று தேர்வு செய்துவிட்டீர்கள். அதே போல் சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியின் வின்னர் யார் என்பதையும் தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்று பதிவு செய்திருந்தார்.

இதற்கு பென்னி தயால், கோபமாக எதையும் கூறாமல், ஹாப்பி ஓணம் என்று பதிவிட்டு ரிப்ளை செய்துள்ளார்.

LATEST News

Trending News