நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் அதிரடி கைது: காரணம் இதுதான்
பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் நேற்று இரவு திடீரென மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலிகள் மூலம் பணம் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் ராஜ்குந்த்ரா குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராஜ்குந்த்ரா மும்பையில் நேற்று இரவு திடீரென கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே உமேஷ் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மும்பையில் ஆபாச படங்கள் தயாரித்து பிரிட்டனிலுள்ள செல்போன் செயலி நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்து வருவதாகவும் அந்த ஆபாச படங்கள் சந்தா வாங்கும் செயலியில் பதிவு செய்யப்பட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளதாக தெரிகிறது
நடிகை ஷில்பா செட்டி, விஜய் நடித்த ’குஷி’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் என்பதும் பிரபுதேவா நடித்த ’மிஸ்டர் ரோமியோ’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.