எதிர்பார்த்ததை விட தெலுங்கில் அதிரடி வசூல் செய்து வரும் மாஸ்டர், இரண்டாவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் பயங்கர வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழ் நாட்டில் மட்டும் 25+ கோடி என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இரண்டாவது நாள் 3.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் திரைப்படம் அங்கு எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் செய்துவருவதால் அதிக லாபம் கொடுத்துள்ள படமாக அமையும் என கூறப்படுகிறது.