துபாய் போனதும் கிளாமருக்கு மாறிய பிரியங்கா மோகன்: வைரல் புகைப்படங்கள்!
இதுவரை நடித்த திரைப்படங்களில் குடும்ப குத்துவிளக்காக இருந்த நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் துபாய் சென்ற நிலையில் அங்கு கிளாமர் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன
இயக்குனர் நெல்சன் தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் துபாய் சென்றபோது அவருடன் பிரியங்கா மோகன், கவின் உள்பட மேலும் சிலரும் சென்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் துபாயில் கிளாமர் உடையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை ப்ரியங்கா மோகன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதுவரை அவர் நடித்த ’டாக்டர்’ ’எதற்கும் துணிந்தவன்’ ‘டான்’ ஆகிய படங்களில் குடும்ப குத்துவிளக்காக காட்சி அளித்த நிலையில் திடீரென தற்போது கிளாமர் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.