தமன்னாவின் அடுத்த படத்தில் இந்த நடிகையின் கணவர் தான் ஹீரோ!

தமன்னாவின் அடுத்த படத்தில் இந்த நடிகையின் கணவர் தான் ஹீரோ!

தமன்னா நடிக்க உள்ள அடுத்த படத்தில் பிரபல நடிகையாக இருந்தவரின் கணவர் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தமிழ், தெலுங்கு, பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா தற்போது வெப்தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவர் நடித்த வெப்தொடரான ’நவம்பர் ஸ்டோரி’ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமன்னா நடிக்க இருக்கும் அடுத்த வெப்தொடர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக தயாரிக்கப்படும் இந்த திரைப்படத்தின் டைட்டில் ’பிளான் ஏ பிளான் பி’ என்று வைக்கப்பட்டிருக்கிறது

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகரும் நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது என்பதும், படப்பிடிப்பின்போது படத்தின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES