தீபிகா படுகோனே கர்ப்பமா ?, பரவும் தகவல்

தீபிகா படுகோனே கர்ப்பமா ?, பரவும் தகவல்

பாலிவுட்டில் பப்பராசி புகைப்படக்காரர்களிடம் இருந்து சினிமா பிரபலங்கள் தப்பவே முடியாது. நடிகர்கள், குறிப்பாக நடிகைகள் எங்கு சென்றாலும் அவர்களைப் பின் தொடர்ந்து புகைப்படங்களை எடுப்பார்கள்.

வாக்கிங் போகும் போதும், ஜிம்மிற்குப் போகும் போதும், பர்த் டே பார்ட்டிகளுக்குப் போகும் போதும், வேலை நிமித்தமாக மற்றவர்களைச் சந்திக்கும் போதும் புகைப்படங்களை எடுப்பது வழக்கம். ஆனால், அவர்கள் தனிப்பட்ட விஷயங்களுக்காக மருத்துவமனை சென்றால் கூட விட்டுவைப்பதில்லை. சில சினிமா பிரபலங்களும் அது பற்றி பெரிதாகக் கவலைப்பட்டதில்லை, தங்களுக்கு எந்த ரூபத்திலோ செய்திகளில் அடிபடுவதை விரும்புவார்கள்.

பாலிவுட்டின் முக்கிய கதாநாயகியான பெங்களூருவைச் சேர்ந்த தீபிகா படுகோனே, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரபல கதாநாயகனான ரன்வீர் சிங்கை காதலித்து மணம் புரிந்தார். தீபிகா இன்னமும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. நேற்று தீபிகா, ரன்வீர் இருவரும் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு ஜோடியாக சென்றுள்ளார்கள். அதனால், தீபிகா கர்ப்பம் அடைந்துள்ளதார், பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்குச் சென்றார் என செய்தி பரவியுள்ளது.

தற்போது சில ஹிந்திப் படங்களிலும், பிரபாஸ் ஜோடியாக ஒரு தெலுங்குப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அப்படங்களில் நடித்துக் கொடுக்க வேண்டியுள்ளதால் அவர் கர்ப்பம் தரித்திருக்க வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள். தீபிகாவே அது பற்றி அறிவிப்பதற்கு முன்பு மீடியாக்கள் இப்படி செய்தி பரப்புகிறார்கள் என்றும் சிலர் கவலைப்படுகிறார்கள்.

LATEST News

Trending News