பச்சை வண்ணத்தில் மின்னும் நடிகை கங்கனா… அசத்தலான புகைப்படம் வைரல்!

பச்சை வண்ணத்தில் மின்னும் நடிகை கங்கனா… அசத்தலான புகைப்படம் வைரல்!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான “தாம்தூம்” திரைப்படத்தில் நடித்து இருந்தார். தற்போது மீண்டும் தமிழில், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான “தலைவி” திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்துவரும் இவர் பல வெற்றிப்படங்களில் நடித்து இருக்கிறார். இதைத்தவிர கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற “மணிகர்னிகா-தி குயின் ஆஃப் ஜான்சி” திரைப்படத்திற்கு பின்பு அவர் இயக்குநர் அவதாரத்தையும் எடுத்துள்ளார்.

அந்த வகையில் “Manikarna Returns : The legend of Didda” எனும் திரைப்படத்தின் அறிவிப்பை அவர் வெளியிட்டு உள்ளார். இதைத்தவிர இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான “Emergency” திரைப்படம் குறித்த அறிவிப்பையும் அவர் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கங்கனா, போட்டோஷுட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார். அதில் பச்சை வண்ணத்தில் Strappy dress அணிந்து அதற்கு மேட்சிங்காக பச்சை வண்ணக்கல் வைத்த நெக்லசையும் அவர் அணிந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES