இந்தியில் திரைப்படமாகிறது சவுரவ் கங்குலி வாழ்க்கை… நடிகர் யார் தெரியுமா?

இந்தியில் திரைப்படமாகிறது சவுரவ் கங்குலி வாழ்க்கை… நடிகர் யார் தெரியுமா?

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐயின் தலைவருமான சவுரவ் கங்குலி தனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்கு ஒப்புதல் அளித்து இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. பாலிவுட் வட்டாரத்தில் பல ஆண்டுகளாக கங்குலியின் பயோபிக் குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த தகவல்களை தொடர்ந்து மறுத்துவந்த அவர் தற்போது முதல் முறையாக பயோபிக் திரைப்படத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறார்.

மேலும் இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் பிரபலம் ரன்பீர் கபூர் நடித்தால் நன்றாக இருக்கும் என கங்குலியே பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தி சினிமாக்களில் விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்களின் பயோபிக் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு அவை சமீபகாலமாக வெற்றிப்பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சவுரவ் கங்குலியின் பயோபிக் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து பேசிய கங்குலி இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பதை தற்போது தெரிவிக்க முடியாது என்றும் விரைவில் அதுகுறித்த அறிவிப்பு முறையாக வெளிவரும் எனவும் கூறியிருக்கிறார். கடந்த 1996 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான சவுரவ் கங்குலி ஒரே போட்டியில் இரட்டைச் சதத்தை அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

பின்னர் இந்தியக் கிரிக்கெட் அணியில் மேட்ச் பிட்ச்சிங் தலைத்தூக்கத் துவங்கிய காலத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி 28 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு அதில் 11 முறை வெற்றிப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கில் வெளுத்து வாங்கும் கங்குலி தன்னுடைய கேப்டன்ஷியில் வீரர்களின் தேர்வு முறையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். பல இளம் வீரர்கள் கங்குலி இருந்த காலக்கட்டத்தில் அறிமுகமாகினர்.

அந்த வகையில் கங்குலியின் கண்டுபிடிப்புத்தான் தல தோனி என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இந்தியக் கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத ஆளுமையாக திகழ்ந்து வரும் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தில் அவருடைய இளமை காலம் முதல் பிசிசிஐ தலைவராக உயர்ந்தது வரை பல திருப்பங்கள் இடம்பெறும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES