கதையை திருடிவிட்டதாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு!

கதையை திருடிவிட்டதாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு!

பாலிவுட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற "மணிகர்னிகா". இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தான் எழுதி, இயக்க இருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து அந்தப் படத்தின் கதை, தனது புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது எனக்கூறி எழுத்தாளர் ஒருவர் மும்பை போலீஸில் வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்தப் புகாரை அடுத்து நடிகை கங்கனா உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஆம் ஆண்டு "மணிகர்னிகா- தி குயின் ஆஃப் ஜான்சி" எனும் திரைப்படத்தை நடிகை கங்கனா வேறு இரு இயக்குநர்களுடன் சேர்ந்து இயக்கி இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தை அடுத்து நடிகை கங்கனா தமிழில், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான "தலைவி" படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். கொரோனா காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தாமதமாகியுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை அடுத்து மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை "எமர்ஜென்ஸி" எனும் பெயரில் தாமே இயக்கி, நடிக்க இருப்பதாக நடிகை கங்கனா அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பிற்கு பல தரப்புகளில் இருந்து அதிருப்தி ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த "எமர்ஜென்ஸி" திரைப்படத்தின் அறிவிப்பின்போது "Manikarna Returns: The legend of Didda" எனும் திரைப்படத்தின் அறிவிப்பையும் நடிகை கங்கனா சேர்த்து வெளியிட்டு இருந்தார். பாகிஸ்தானை சேர்ந்த மாகாராணி Didda என்பவர் காலத்தில் கஜினி முகமதுவை எதிர்த்து போரிட்டர். அவரை கொண்டாடும் விதமாக இந்தப் படத்தின் கதையைத் தான் தேர்வு செய்து இருப்பதாகவும் நடிகை கங்கனா சமூகு வலைத்தளங்களில் தெரிவித்து இருந்தார்.

தற்போது "Didda The Warrior Queen of Kashmir" எனும் தனது புத்தகத்தில் இருந்துதான் Queen Diddaவின் கதையை நடிகை கங்கனா எடுத்து இருக்கிறார் எனக்கூறி அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஆசிஷ் கௌல் மும்பை போலீஸில் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதையடுத்து நடிகை கங்கனா அவரது சகோதரர்கள் சார்பில் இந்தப் படத்தின் கதையை நாங்கள் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. எந்த அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் வாழ்க்கை வரலாற்றுக் கதையை யார் வேண்டுமானாலும் திரைக்கதையாக மாற்றலாம்” என விளக்கம் அளித்து உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

இதையடுத்து Manikarna Returns வரலாற்றுத் திரைப்படம் என்பதால் நடிகை கங்கனாவிற்கு சாதகமாகவே முடிவு வரும் எனப்பல தரப்புகளில் இருந்து கருத்துகள் கூறப்படுகின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES