பாலிவுட்டில் ரீமேக்காக உள்ள முக்கிய தமிழ் திரைப்படங்கள், நீண்டு கொண்டே போகும் லிஸ்ட்!
ஒரு மொழியில் ஹிட்டான திரைப்படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்துவது வழக்கமாக நடந்து வருகிறது.
ந்த வகையில் கடைசியாக மலையாளத்தில் ஹிட்டான சார்லி திரைப்படத்தை தமிழில் மாதவன் நடிப்பில் மாறா என ரீமேக் செய்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழில் ஹிட்டான திரைப்படங்களை பாலிவுட்டில் ரீமேக் செய்யவுள்ளனர்.மேலும் அந்த படங்கள் குறித்த விவரத்தை தான் பார்கவுள்ளோம்.
1. ராட்சசன் - அக்ஷய் குமார் நடிப்பில் ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது.
2. கைதி - அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக்காக உள்ளது.
3. விக்ரம் வேதா - ரீமேக்கில் ஹிரித்திக் ரோஷன் மற்றும் சைப் அலிகான் நடிக்க உள்ளனர்.
4. அந்நியன் - ரன்வீர் சிங் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஹிந்தியில் ரீமேக்காகிறது.
5. மாஸ்டர், கோலமாவு கோகிலா உள்ளிட்ட திரைப்படங்கள் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.