அஜய் தேவ்கன் தயாரிப்பில் ஹிந்தியில் ரீமேக்காகும் வரலட்சுமி படம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லரி நரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான நாந்தி என்கிற படம் மவுத் டாக் மூலமாகவே பிக்-அப் ஆகி டீசன்டான வெற்றியை பெற்றது. தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிரபராதியை மீட்க சட்டப்போராட்டம் நடத்தும் வக்கீலாக வரலட்சுமி நடித்திருந்தார்..
இந்தப்படத்திற்கு எந்த மொழியிலும் ரீமேக் ஆகும் வேல்யூ இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், இந்தப்படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ கைப்பற்றி இருந்தார். இந்தநிலையில் இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவதற்கான வேலைகள் துவங்கியுள்ளன. தயாரிப்பாளர் தில் ராஜூவுடன் இணைந்து இந்த படத்தை இந்தியில் தயாரிக்கிறார் நடிகர் அஜய் தேவ்கன்.