ரூ.500 கோடி 'ராமாயண்' படத்திற்கு வரும் 'அவதார்' குழுவினர்

ரூ.500 கோடி 'ராமாயண்' படத்திற்கு வரும் 'அவதார்' குழுவினர்

இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றைத் திரைப்படமாக்க சிலர் முயன்று வருகின்றனர். அவற்றில் ஒன்று ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோனே நடிக்க உள்ள 'ராமாயண்' படம். 500 கோடி ரூபாய் செலவில் 3 -டியில் தயாராக உள்ள இந்தப் படத்தை தெலுங்குத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மற்றும் மது, நமித் மல்கோத்ரா தயாரிக்க உள்ளனர். இப்படத்தை பாலிவுட் இயக்குனரான மது மந்தெனா இயக்க உள்ளார்.

ஹிருத்திக் ரோஷன் ராவணன் ஆகவும், தீபிகா படுகோனே சீதை ஆகவும் நடிக்க உள்ள இப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை ராமன் ஆக நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள்.

இப்படத்திற்காக 'அவதார்' படத்தில் பணியாற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த காஸ்ட்டியூம் டிசைன் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம். அக்குழுவினர் ஹிருத்திக் கதாபாத்திரத்திற்கான ஆடைகளை வடிவமைப்பார்கள் எனத் தெரிகிறது.

பிரபாஸ், சைப் அலிகான், கிர்த்தி சனோன் நடிக்கும் ராமாயணக் கதையான 'ஆதி புருஷ்' படத்தை விடவும் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க முடிவெடுத்துள்ளதால் தான் ஹாலிவுட் கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

LATEST News

Trending News