விஜய்யின் மாஸ்டர் பட ஹிந்தி ரீமேக்கில் இந்த நடிகர் நடிக்கிறாரா?- வெளிவந்த தகவல்

விஜய்யின் மாஸ்டர் பட ஹிந்தி ரீமேக்கில் இந்த நடிகர் நடிக்கிறாரா?- வெளிவந்த தகவல்

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இவ்வருடம் ஆரம்பத்தில் வெளியான முதல் திரைப்படம் மாஸ்டர்.

இப்படம் 2020ம் ஆண்டே வெளியாக வேண்டியது ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த வருட ஆரம்பத்தில் வெளியானது.

திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்திருந்தன. 

தற்போது இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் பற்றிய தகவல்கள் வருகின்றன.

மாஸ்டர் படக்குழு பாலிவுட்டின் டாப் ஹீரோவான சல்மான் கானிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

அவர் மட்டும் படத்தில் நடிக்க ஓகே சொன்னால் கண்டிப்பாக படம் அங்கேயும் ஹிட்டடிக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.

LATEST News

Trending News

HOT GALLERIES