லோகேஷ் கனகராஜ் படத்தின் இந்தி ரீமேக்கில் காஜல் அகர்வால்?

லோகேஷ் கனகராஜ் படத்தின் இந்தி ரீமேக்கில் காஜல் அகர்வால்?

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய வெற்றி படங்களில் ஒன்று ’கைதி’ என்பது தெரிந்ததே. கார்த்தி நடித்த இந்த திரைப்படத்தில் இரண்டு சிறப்பு அம்சங்கள் இருந்தது. ஒன்று இந்த படத்தில் பாடல்கள் இல்லை, இன்னொன்று இந்த படத்தில் நாயகி இல்லை

இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. கார்த்தி நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள ‘கைதி’ திரைப்படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் பிளாஷ்பேக்கில் அஜய்தேவ்கான் மனைவி கேரக்டர் ஒன்று உருவாக்கப்பட்டதாகவும், அதில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மாற்றம் ஹிந்திக்கு செட் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

முன்னதாக அமிதாபச்சன் நடித்த ’பிங்க்’ என்ற படத்தில் அவருக்கு ஜோடி இல்லாத நிலையில் அதன் தமிழ் ரீமேக்கான ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிமேக் செய்யப்படும் படங்களில் இதுபோன்ற சில மாற்றங்கள் செய்வது நடைமுறையில் இருப்பதால் அதே போன்று ‘கைதி’ இந்தி ரீமேக்கிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES