பிரபல பாலிவுட் நடிகை யாமி கௌதமிற்கு திருமணம் முடிந்தது, இணையத்தில் அவர் வெளியிட்ட திருமண புகைப்படம்
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் தான் யாமி கௌதம், இவர் பல திரைப்படங்களில் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும் தமிழில் கெளரவம் என்ற திரைப்படத்தில் நடித்தார், அதனை தொடர்ந்து ஜெய் உடன் தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை யாமி கௌதமிற்கும் ஆதித்திய என்பவருக்கும் இன்று திருமணம் நடந்துள்ளது.
மேலும் அவர்களின் திருமண புகைப்படத்தை யாமி கெளதம் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.