பாலிவுட்டில் தனுஷ் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான்
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மான், அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் அவ்வப்போது தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் இந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் துல்கர் சல்மான். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாக உள்ளது.
இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். நடிகர் துல்கர் சல்மான் இந்தியில் நடிக்கும் மூன்றாவது படம் இதுவாகும். அவர் ஏற்கனவே கார்வான், தி சோயா பேக்டர் போன்ற இந்தி படங்களில் நடித்துள்ளார். தனுஷ் பாலிவுட்டில் நடித்த ஷமிதாப் படத்தை இயக்குனர் பால்கி தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.