சமந்தா அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது தமிழில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும்’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்திலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் தற்போது ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதும் விரைவில் இந்த படங்களின் படப்பிடிப்பு தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் தயாராகிவரும் ’தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப்தொடரில் சமந்தா நடித்து வருகிறார். இந்த வெப்தொடரில் மனோஜ் பாஜ்பாய் பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தற்போது இதன் டிரைலர் வரும் 19ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சமந்தா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த வெப்தொடர் வரும் ஜூன் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரம் ஒளிபரப்பாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.