குட்நியூஸ் சொன்ன சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. போஸ்ட்டுக்கு குவியும் வாழ்த்துக்கள்

குட்நியூஸ் சொன்ன சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. போஸ்ட்டுக்கு குவியும் வாழ்த்துக்கள்

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதி பிரியா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுக்கும் வகையில் அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தான் டிஆர்பியில் முதல் இடத்தில் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.

குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை அடிப்படையாக கொண்டு நகர்த்தப்படும் இந்த சீரியலில், ரோகிணி எப்போது மாட்டுவார் என பலரும் எதிர்ப் பார்த்து வருகிறார்கள். இதுவே சிறகடிக்க ஆசை சீரியலின் கருவாக பார்க்கப்படுகிறது.

குட்நியூஸ் சொன்ன சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. போஸ்ட்டுக்கு குவியும் வாழ்த்துக்கள் | Siragadikka Asai Gomathi Priya Commited New Serial

சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் கோமதி பிரியா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மதுரையை சார்ந்த கோமதி பிரியாவிற்கு இந்த சீரியல் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்துள்ளது. விஜய் டிவியில் பாவம் கணேசன் உட்பட சில சீரியல்களில் கோமதி பிரியா நடித்திருக்கிறார். ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் சிறகடிக்க ஆசை சீரியல் தேடி தந்துள்ளது.

தற்போது பல குடும்பங்களில் கோமதி பிரியாவை அவர்கள் வீட்டு மீனாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியலில் எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறாரோ அதே போன்று சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

குட்நியூஸ் சொன்ன சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. போஸ்ட்டுக்கு குவியும் வாழ்த்துக்கள் | Siragadikka Asai Gomathi Priya Commited New Serial

அந்த வகையில், சிறகடிக்க ஆசை சீரியல் கதாநாயகியாக மக்கள் மத்தியில் வலம் வரும் கோமதி பிரியா தற்போது புதிய சீரியலில் களமிறங்கியுள்ளார். 'அடியே சிறுக்கி மகளே' என்ற தலைப்பில் எடுக்கப்படும் இந்த சீரியலில் கதாநாயகியாகவும் நடிகர் நவீன் கதாநாயகராகவும் நடிக்கவுள்ளனர்.

இது தொடர்பான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பதிவிற்கு சின்னத்திரை ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

LATEST News

Trending News