என்ன கன்றாவி இது? சுடிதார் மேல் உள்ளாடை.. சீரியல் நடிகை ஹேமரா ராஜ்குமார் கிளாமர் போஸ்..!
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஹேமா ராஜ்குமார், மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவர்.
பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட பல சீரியல்களிலும், ரஜினியின் பாட்ஷா, சரத்குமாரின் சூர்யவம்சம் போன்ற திரைப்படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹேமா, தனது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில் அழகு குறிப்புகள், வாழ்க்கை முறை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தவறாமல் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில், உள்ளாடை (ப்ரா) வெளியே தெரிவது போன்ற வடிவமைப்பில் சுடிதார் அணிந்து ஹேமா ராஜ்குமார் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த புதுமையான உடை வடிவமைப்பு, சமீப காலமாக சில நடிகைகள் ஜாக்கெட்டுகளில் இதேபோன்ற வடிவமைப்பை பயன்படுத்துவதைப் போலவே, சுடிதாரிலும் இப்போது பிரபலமாகி வருகிறது.
இந்த புகைப்படங்களில் ஹேமா கவர்ச்சியாக போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எனினும், இந்த புகைப்படங்களைப் பார்த்த சில ரசிகர்கள், “நீ என்னம்மா, உள்ளே போட வேண்டியதை வெளியே போட்டுக்கிட்டு இருக்க?” என்று விமர்சன கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மற்றொரு தரப்பு ரசிகர்கள், ஹேமாவின் புதுமையான பேஷன் தேர்வை பாராட்டி, அவரது தைரியமான தோற்றத்தை வரவேற்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தீவிர விவாதத்தை உருவாக்கியுள்ளன, மேலும் ஹேமாவின் இந்த புதிய தோற்றம் அவரது ரசிகர் பட்டாளத்தை மேலும் விரிவாக்கியுள்ளது.
இதற்கு முன்பும் ஸ்லீவ்லெஸ் உடைகள், மாடர்ன் சேலைகளில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு பாராட்டுகளை பெற்ற ஹேமா, இந்த புதிய சுடிதார் டிசைனிலும் கவனம் ஈர்த்து, சின்னத்திரை நடிகையாக தனது மவுஸை உயர்த்தியுள்ளார்.