போன வருஷம் அந்த உறுப்பில் அடி பட்டுச்சு.. இந்த வருஷம் இங்க.. பிரியங்கா தேஷ்பாண்டே ஓப்பன்!
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பிரபலமாக இருப்பவர் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே. ‘சூப்பர் சிங்கர்’, ‘ஸ்டார்ட் மியூசிக்’, ‘ஓ சொல்றியா ஓ ஓஹ்ம் சொல்றியா’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தனது தனித்துவமான பாணியில் தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தவர்.
2024ஆம் ஆண்டு ‘குக் வித் கோமாளி’ சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். ஆனால், இந்த சீசனில், சக தொகுப்பாளினி மணிமேகலை உடனான கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்கா பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
மணிமேகலை, பிரியங்கா தனது தொகுப்பாளர் பணிகளில் தலையிட்டு ஆதிக்கம் செலுத்தியதாக குற்றஞ்சாட்டி, நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது குறித்து சமூக ஊடகங்களில் பரவிய விமர்சனங்கள், பிரியங்காவை ‘ஆதிக்கம் செலுத்துபவர்’ என சித்தரித்தன.
இந்த சர்ச்சை பலரையும் பேச வைத்தது, மேலும் பிரபல பாடகி சுசித்ரா உள்ளிட்டோர் மணிமேகலையை ஆதரித்து பிரியங்காவை விமர்சித்தனர்.இந்நிலையில், பிரியங்கா தற்போது மாகாபா ஆனந்துடன் இணைந்து ‘ஓ சொல்றியா ஓ ஓஹ்ம் சொல்றியா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த வார எபிசோடில், அரந்தாங்கி நிஷா ஜோசியர் வேடத்தில் தோன்றி, பிரியங்காவை கலாய்த்தார். “உனக்கு இப்போ கால்ல அடிப்பட்டு இருக்கணுமே?” என்று நிஷா கேட்க, பிரியங்கா, “ஆமாம்” என்று பதிலளித்தார்.
அதற்கு நிஷா, “உனக்கு நிறைய வாய்ல தான் அடிப்பட்டு இருக்கணும்!” என்று கிண்டல் செய்ய, பிரியங்கா, “கடந்த வருஷம் வாய்ல அடிப்பட்டுச்சு, இந்த வருஷம் கால்ல அடிப்பட்டு இருக்கு. 2024 வாய், 2025 கால்!” என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.
இதற்கு நிஷா, “நீ தானம் பண்ணா இனி அடியே விழாது!” என்று கூறி சிரிப்பை வரவழைத்தார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் இதனை மணிமேகலை சர்ச்சையுடன் தொடர்புபடுத்தி கலாய்த்து வருகின்றனர்.
“2024 வாய் அடி என்பது மணிமேகலை விவகாரத்தை குறிக்கிறதா?” என்று சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது. சிலர், பிரியங்காவின் இந்த நகைச்சுவை பதிலை, தன்மீது வந்த விமர்சனங்களை நகைச்சுவையாக எதிர்கொள்ளும் முயற்சியாக பார்க்கின்றனர்.
ஆனால், இது மணிமேகலை விவகாரத்தை மறைமுகமாக உறுதிப்படுத்துவதாகவும் சிலர் கருதுகின்றனர். இந்த சம்பவம், ‘குக் வித் கோமாளி’ சர்ச்சையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.