சாய்பல்லவியா இப்படி நடித்துள்ளார்..? - அதிர்ச்சியில் ரசிகர்கள் - தீயாய் பரவும் வீடியோ..!

சாய்பல்லவியா இப்படி நடித்துள்ளார்..? - அதிர்ச்சியில் ரசிகர்கள் - தீயாய் பரவும் வீடியோ..!

தெலுங்கில் சாய் பல்லவி முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் விராட்ட பர்வம். அவருடன் ராணா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 30-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. 

மலையாளம், தமிழை விட சாய்பல்லவிக்கு தெலுங்கில் தான் அதிக வரவேற்பு இருக்கிறது. அந்தவகையில் அவர் தெலுங்கில் தற்போது லவ் ஸ்டோரி, விராட பர்வம் உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார். 

 

இதில் ராணா கதாநாயகனாக நடிக்கும் விராட பர்வம் படத்தில் சாய்பல்லவி பவர்புல்லான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியுடன் சாய்பல்லவியின் கதாபாத்திர பெயருடன் கூடிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. 

 

படம் வரும் ஏப்-30ஆம் தேதி வெளியாகிறது. இதுவரை பக்கத்து வீட்டுப்பெண் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த சாய்பல்லவி இந்தப்படத்தில் வெண்ணிலா என்கிற நக்ஸலைட்டாக நடித்துள்ளார். 

பாடுவதில் தீராத ஆர்வம் கொண்ட ஒரு கிராமத்து பெண் எதிர்பாராத சூழலால் எப்படி நக்ஸலைட் இயக்கத்தில் சேருகிறாள் என்பதுதான் படத்தின் கதை. வேணு உடுகுலா என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ராணா நடித்துள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES