அக்காவின் இரண்டாம் திருமணம்.. நிச்சயதார்த்தம் புகைப்படங்களை வெளியிட்ட அதிதி ஷங்கர்
திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அதிதி ஷங்கர். இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதை நாம் அறிவோம்.
நடிகை அதிதி ஷங்கரின் அக்கா ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2021ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
ஆனால், இந்த திருமண வாழ்க்கை ஐஸ்வர்யாவிற்கு நீடிக்கவில்லை. ஆம், திருமணமாகி 6 மாதத்தில் ரோஹித் போக்ஸோ வழக்கில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதன்பின் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், தற்போது ஷங்கரின் துணை இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன், ஐஸ்வர்யா ஷங்கருக்கு இரண்டாம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இவர்களுடைய நிச்சயதார்த்தம் விமர்சையாக நடைபெற்றுள்ளது.
தனது அக்கா ஐஸ்வர்யாவின் நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அதிதி ஷங்கர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..