அனிருத்துடன் டேட்டிங் வதந்தி.. பல சர்ச்சைகள்!! இப்படியொரு விஷயத்தை செய்துள்ள தேசியவிருது
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தேசிய விருது வாங்கிய பின் அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது.
தற்போது பாலிவுட் சினிமாவில் இயக்குனர் அட்லீ இயக்கி வெற்றி படமாக அமைந்த தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் சமந்தா ரோலில் வருண் தவானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அட்லீ தயாரிப்பில் Kalees என்ற இயக்குனர் BabyJohn என்ற பெயரில் இயக்கி வருகிறார். சுரேஷ் இப்படத்தில் ஒரு காட்சியில் போல்ட்-ஆக நடிக்கவுள்ளார் என்ற செய்தி கசிந்துள்ளது. தெறி படத்தில் விஜய் - சமந்தாவுக்கு இடையே லிப்லாக் காட்சி மட்டுமே இருக்கும்.
பேபி ஜான் படத்தில் நடிகர் வருண் தவானுடன் நெருக்கமான காட்சியில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருடன் டேட்டிங் செய்வதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்று பல வதந்திகள் பரவியது. இதெல்லாம் ஆதாரமற்ற விஷயம் என்று கீர்த்தி சுரேஷின் தந்தை மறுத்தார். இதுபற்றிய செய்திகளை நிறுத்துமாறும் கேட்டுகொண்டார்.
அதேபோல் துபாயை சேர்ந்த தொழிலதிபருடன் டேட்டிங் செய்கிறார்கள் என்று அவரும் கீர்த்தி சுரேஷிம் 9 ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்றும் கூறப்பட்டது.
ரகுதாதா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான் இந்தியன் படமான கல்கி 2898 ஏடி படத்தில் புஜ்ஜி என்கிற ரோபோவுக்கு குரல் கொடுத்திருக்கிறார். என்னதான் தன்மீது வதந்திகள் சர்ச்சைகள் வெளியாகினாலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தன் வேலையில் பிஸியாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.