'வீரமே வாகை சூடும்” படத்தில் கவனம் ஈர்க்கும் இளம் நாயகன் அகிலன் SPR !

'வீரமே வாகை சூடும்” படத்தில் கவனம் ஈர்க்கும் இளம் நாயகன் அகிலன் SPR !

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்” என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஒரு இளம் ஹீரோ கிடைத்துள்ளார். அவர்தான் நடிகர் அகிலன் SPR

’வீரமே வாகை சூடும்” படத்தில் விஷாலின் தங்கையின் காதலர் கேரக்டரில் நடித்திருக்கும் இவருடைய நடிப்புக்கு விமர்சகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல ஹீரோ கிடைத்து விட்டதாகவும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தற்போது ’பீட்சா 3’ படத்தில் முக்கிய பாத்திரத்திலும், ஒரு வெப்சீரிஸில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதேபோல் ஒரு மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். இயக்குநர் பானுசங்கர் இயக்கும் இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஒரு இளம் நடிகர் நாயகனாக பிரமாண்டமான தெலுங்கு படத்தில் அறிமுகமாவது இதுவே முதல் முறை.

தமிழிலும் இவருக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது சில தமிழ் படங்களில் நாயகானாக ஒப்பந்தமாகியுள்ளார் அகிலன் SPR. அது பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

LATEST News

Trending News