பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜோவிகா பிரபல இயக்குனருடன் பணிபுரிகிறாரா! அது யார் தெரியுமா...
பிரமாண்டமாக நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வனிதாவின் மகள் ஜோவிகா எலிமினேட் செய்யப்பட்டார்.
தனது தவறுகளை ஏற்றுக்கொண்ட ஜோவிகாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
இந்நிலையில், ஜோவிகா குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதுநாள்வரை ஜோவிகா வனிதாவின் மகளாக தான் நாம் அனைவரும் பார்த்து வந்தோம்.
இனி வருங்காலத்தில் அவர் இயக்குனராக மாறினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. ஆம், ஏனென்றால் ஜோவிகா தற்போது இயக்குனரும், நடிகருமான பார்த்திபனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறாராம்.
இது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். ஆகாயல், வருங்காலத்தில் கண்டிப்பாக ஜோவிகா ஒரு நடிகையாகவோ அல்லது இயக்குநராகவோ களமிறங்க வாய்ப்புகள் உள்ளது.