நடிகர் அஜித்தின் உடல் நிலை குறித்து வெளியான பரபரபப்பு தகவல்..! – சோகத்தில் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை தக்கவைத்திருப்பவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் திரைப்படங்கள் வெளிவந்தாலே அன்று திருவிழாவாக அவரது ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
பால் அபிஷேகம் கட் அவுட், பாட்டு, பேண்டு என தியேட்டரையே ஒரு விதம் செய்துவிடுவார்கள். மார்னிங் சோ வில் ஆரம்பித்து ஒவ்வொரு கொண்டாட்டமும் ரசிகர்களுக்கு பேரின்பமாக இருக்கும்.
இதற்கிடையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் போட்டிகளும் நிலவும். அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆக்கியிருக்கிறார். விடாமுயற்சி கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக நிதி நெருக்கடியால் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
இதனால் படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என கவலையில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.
ஆம் அது என்னவெனில் நடிகர் அஜித்திற்கு கடந்து செல்ல நாட்களாகவே உடல்நலம் முடியாமல் போனதாகவும், அப்போலோ மருத்துவமனைகளில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
நார்மல் செக்கப் என்றுதான் எல்லோரும் முதலில் கூறி வந்தார்கள். ஆனால், உண்மையில் அஜித்துக்கு என்ன நடந்தது என்றால் அவரின் மூளையில் கட்டி இருந்ததாகவும் அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கேரளா மற்றும் மதுரை சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் தான் அஜித்திற்கு இந்த அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் கடும் சோகமடைந்து பேரதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.
அது மட்டும் இல்லாமல் அந்த கட்டி மூளையின் வலது புறம் இருந்ததாகவும் அதை அகற்றிய பிறகு அஜித் தற்போது அப்சர்வேஷனில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இருந்தாலும் இன்னும் அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டாயம் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்களாம்.
அஜித் ரசிகர்கள் இந்த தகவலை கேட்டு மிகுந்த அச்சமடைந்துள்ளனர். சிலர் அச்சம் கொள்ள வேண்டாம் அவர் சரியாகி மீண்டும் வருவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும், பிரார்த்தனையாகவும் இருக்கிறது.
இப்படியான நேரத்தில் விடாமுயற்சி படத்தை நிச்சயம் நம்மால் எதிர்பார்க்கவே முடியாது. எனவே மீண்டும் பல மாதங்கள் கிடப்பில் போடப்படலாம் என்பதுதான் தற்போதைய விடாமுயற்சியின் நிலையாக இருக்கிறது.