பல இலட்சம் ரூபாயிற்கு சொந்தக்காரியான அக்ஷயா! சம்பளம் எவ்வளவு தெரியுமா...
50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டிலிருந்து அக்ஷயாவின் சம்பள விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில், வெளியில் தற்போது இரண்டு போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்துள்ளார்கள். தொடர்ந்து போட்டியாளர்கள் பரபரப்பாக தங்களின் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.
விஷம் என புனைப்பெயர் கொண்டு அழைக்கப்படும் பூர்ணிமா மாயாவிற்கு எதிராக சில வேலைகளை பார்த்து வருகிறார்.
இப்படியொரு நிலையில் கடந்த வாரம் வெளியேறிய அக்ஷயா பிக்பாஸ் வீட்டில் இருந்தமைக்காக 50 நாட்களை கடந்து பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த அக்ஷயா ஒரு நாளைக்கு ரூ. 15 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அத்துடன்“ லக்காகால் இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக பெற்றுள்ளீர்..” என இணையவாசிகள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.